Loading...
 

சமூக விழிப்புணர்வு சொற்பொழிவு போட்டி

 

Sustainability

 

சொற்பொழிவின் கால அளவு

சமூக விழிப்புணர்வு சொற்பொழிவு போட்டி என்பது நம் உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு எதிராக செயல்படுவதற்கு ஊக்கமளிக்கும், ஆதரவை ஊக்குவிக்கும் திறன் கொண்ட நபர்களைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சொற்பொழிவில் ஒரு சமூக முன்னிறுத்தலைக் கொண்ட ஒரு சமூக அல்லது தனிப்பட்ட பிரச்சனையின் தெளிவான விளக்கம் இடம்பெற வேண்டும் (உதாரணமாக - பாகுபாடு, தண்ணீர் கிடைக்காதது, கல்வி கிடைக்காதது, தகவல் தொடர்பு திறன் இல்லாமை, சமத்துவமின்மை, ....). இந்தப் பிரச்சனை ஒட்டுமொத்த சமுதாயத்தை பற்றியதாகவோ ("பருவநிலை மாற்றம்") அல்லது பல பேரை பாதிக்கும் ஒரு உள்நாட்டு பிரச்சனையாகவோ இருக்கலாம் (எ.கா .: அரிய நோய் வறுமை, முதலியன)
சொற்பொழிவானது பிரச்சனையை சமாளிக்க ஒரு வழியை முன்மொழிய வேண்டும், மற்றும் பொருந்தக்கூடியதாகவும் (யதார்த்தமானதாகவும்), உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.

பல முறை பேச்சாளர்கள் "விழிப்புணர்வு" பகுதி பற்றி மட்டுமே சொற்பொழிவாற்றுவார்கள்: உதாரணமாக, நாம் இதுவரை கேள்விப்படாத சில குறிப்பிட்ட சிரமங்களை எதிர்கொள்ளும் சில வித்தியாசமான நோய்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இருப்பதை அவர்கள் நமக்குத் தெரியப்படுத்துவார்கள் என்று கூறிவிட்டு அத்தோடு நிறுத்தி விடுவார்கள். போட்டியாளர்கள் அதனைத் தொடர்ந்து- அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள் என்பதையும் தொடர வேண்டும். நீதிபதிகளாகிய நாம் அது உண்மையில் செய்யக்கூடியதா, அது மிகவும் சுவாரஸ்யமான யோசனையா என்று சிந்திக்க வேண்டும். 😅

 

சமூக விழிப்புணர்வு சொற்பொழிவைப் பொறுத்தவரை, பேச்சாளர் உண்மையில் அந்த முன்மொழிவுடன் ஒரு அரசாங்க அமைப்பிற்குச் சென்றால் அல்லது அதைச் செயல்படுத்த நிதி திரட்டினால் அல்லது கையொப்பம் சேகரிப்பு பிரச்சாரத்தைத் தொடங்கினால், அந்த யோசனையை கேட்டு அவர்கள் சிரிக்கக்கூடாது.

 

சமூக விழிப்புணர்வு சொற்பொழிவு போட்டியில் பங்கேற்கும் சொற்பொழிவுகள் அதிகபட்சமாக 7 நிமிடங்கள் இருக்க வேண்டும்.

மற்ற தலைப்புகள் பற்றிய சொற்பொழிவுகள் அல்லது கற்பனையான "பிரச்சினைகள்" பற்றிய சொற்பொழிவுகள் (எ.கா. நிலாவில் தரையிறங்குவது குறித்த பொய்யான கூற்றை நாசா விளக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்) அல்லது போலி அறிவியலை அடிப்படையைக் கொண்டிருக்கும் சொற்பொழிவுகள் தகுதி நீக்கம் செய்யப்படும்.

கல்வி ரீதியான சொற்பொழிவு போட்டியைப் போலவே, போலி அறிவியலைப் பயன்படுத்துவது அல்லது குறிப்பிடுவது அந்த சொற்பொழிவை தகுதியற்றதாக ஆக்கிவிடும்.

 

சொற்பொழிவுகளுக்கு மதிப்பெண் வழங்குவது

பின்வரும் அளவுகோல்களின்படி நீதிபதிகள் சொற்பொழிவுகளுக்கு மதிப்பெண் வழங்குவார்கள்:

  • தெளிவு மற்றும் கவனம் (0 முதல் 10 வரை) - சொற்பொழிவு எவ்வளவு தெளிவாக இருந்தது, அது ஒரு ஒற்றை, நன்கு வரையறுக்கப்பட்ட பிரச்சனையின் மீது கவனம் செலுத்தியதா என்பது கருத்தில் கொள்ளப்படும்.
  • சமூக துல்லியம் (0 முதல் 10 வரை) - விவரிக்கப்பட்டுள்ள பிரச்சனை எவ்வளவு உண்மையானது மற்றும் துல்லியமானது என்பது கருத்தில் கொள்ளப்படும்.
  • மொழியின் பயன்பாடு (0 முதல் 10 வரை) - பயன்படுத்தப்படும் மொழியின் வளம், வெளிப்பாடு மற்றும் தெளிவு ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். பார்வையாளர்களின் மனதில் பிம்பங்களை ஏற்படுத்தும் பேச்சாளரின் திறனும் கருத்தில் கொள்ளப்படும்.
  • கருவிகள் அல்லது காட்சி உபகரணங்களின் பயன்பாடு (0 முதல் 10 வரை) - சொற்பொழிவில் உள்ள செய்தியைப் பெருக்குவதற்கு காட்சி உபகரணங்கள் அல்லது கருவிகளை எவ்வளவு பயனுள்ளதாக இருந்தன என்பது கருத்தில் கொள்ளப்படும்.
  • கதையின் தரம் (0 முதல் 10 வரை) - குரல் வகை, உடல் பாவனை, இடைநிறுத்தங்கள் மற்றும் பிற விவரிப்பு பண்புகள் போன்ற விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
  • உணர்ச்சிபூர்வமான விஷயம் (0 முதல் 10 வரை) - பேச்சாளர் தனது உணர்ச்சிகளை பார்வையாளர்களிடம் வெளிப்படுத்தும் திறன் மற்றும் பார்வையாளர்களை உணர்ச்சிகளை வெளிப்படுத்த வைக்கும் பேச்சாளர் திறன் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும்.
  • கதையின் செய்தி (0 முதல் 10 வரை)- கதையின் முக்கிய தார்மீக செய்தி ஆழம் கருத்தில் கொள்ளப்படும்.
  • தூண்டுதல் (0 முதல் 10 வரை) - பேச்சாளரின் சொற்பொழிவு எவ்வளவு தூண்டுதலாக இருந்தது, அது மக்களை எப்படி செயலில் ஈடுபட வைத்தது போன்ற விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
  • ஆதாரங்களை ஆதரிப்பது (0 முதல் 10 வரை) - பேச்சாளர் அவருடைய நிலை மற்றும் முன்மொழிவுக்கு ஆதரவாக போதுமான தரவுகளை (தரவு, அல்லது ஆய்வுகள், அல்லது தர்க்க ரீதியான பகுத்தறிவு) வழங்கினாரா, அவை பிழைகள் மற்றும் தவறுகள் இல்லாமல் இருந்ததா போன்ற விஷயங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
  • செயலாக்கம் (0 முதல் 10 வரை) - சொற்பொழிவில் செயல்படுத்தக்கூடிய முன்மொழிவுகள், அவற்றின் நம்பகத்தன்மை மற்றும் பார்வையாளர்கள் அவற்றை எப்படி வரவேற்றார்கள் போன்றவை கருத்தில் கொள்ளப்படும்.
  • செயலின் அசல்தன்மை (0 முதல் 10 வரை) - முன்மொழியப்பட்ட செயல்களின் அசல் தன்மை கருத்தில் கொள்ளப்படும்.

ஒவ்வொரு சொற்பொழிவுக்கும், மேற்கூறிய மதிப்பெண்களின் சராசரி கணக்கிடப்படும், அதுவே அந்த போட்டியாளருக்கு வழங்கப்படும் இறுதி மதிப்பெண்ணாகும்.

குறிப்பு: கருவிகள் அல்லது காட்சி உபகரணங்களின் பயன்பாடு விருப்பத்திற்குரியது, பங்கேற்பாளர் கருவிகள் அல்லது காட்சி உபகரணங்கள் எதனையும் பயன்படுத்தவில்லை என்றால், சராசரியைக் கணக்கிடும் போது அந்தப் பிரிவு விலக்கப்படும்.

தலைப்புகள்

உலக இறுதிப் போட்டியைத் தவிர வேறு ஏதேனும் மட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவருக்கு " (பிராந்தியம்) -இன்  சிறந்த சமூக விழிப்புணர்வு பேச்சாளர்" என்ற பட்டம் வழங்கப்படும்.

 


Contributors to this page: shahul.hamid.nachiyar and agora .
Page last modified on Saturday October 23, 2021 17:03:34 CEST by shahul.hamid.nachiyar.